ஹார்ட்புல்னெஸ் கூட்டு தியானம்
ஹார்ட்புல்னெஸ் அமைப்பின், தாராபுரம் ரோடு, பல்லவராயம்பாளையம் வைரவிழாப் பூங்கா வளாகத்தில் நடப்பாண்டின் முதல் கூட்டுத்தியானம் நேற்று நடந்தது. காலை ஓய்வு நிலைப் பயிற்சியும், தொடர்ந்து சத்சங்கமும் நடந்தது. மைய ஒருங்கிணைப்பாளர் குப்தா வரவேற்றார். கடந்த மாதம், அமைப்பின் உலகத் தலைமையிடமான ஆந்திர மாநிலம் கன்ஹா சாந்தி வனத்தில் சர்வதேச தியான நாளை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல்லடம் வனம் பவுண்டேசன் செயலாளர் சுந்தரராஜன், இயற்கை வேளாண் விவசாயி பழனிசாமி ஆகியோர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.பிற்பகல் கூட்டு தியானம், சத்சங்கம் மற்றும் அமைப்பின் தலைவர் தாஜியின் புத்தாண்டு உரை நிகழ்ச்சி ஒளிபரப்பட்டது.