உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அதிக வட்டி மோசடி; மேலும் ஒருவர் கைது

அதிக வட்டி மோசடி; மேலும் ஒருவர் கைது

திருப்பூர் : அதிக வட்டி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.மதுரையை சேர்ந்தவர் முத்தையன், 48. திருப்பூர், பி.என்., ரோட்டில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். முதலீடு செய்தால், அதிக வட்டி கொடுப்பதாக இவர் கூறியதை நம்பி, இந்நிறுவனத்தில் கடந்த, 2018 முதல் பணத்தை பலரும் முதலீடு செய்தனர். ஆனால், வட்டியுடன், பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. ஏமாந்தவர்கள் திருப்பூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் அளித்த புகாரை தொடர்ந்து முத்தையன், அவரது மனைவி மஞ்சு, 47, மகன் கிரண்குமார், 22 உட்பட, ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். முத்தையன் உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.சமீபத்தில், தந்தை, மகனை, 2 நாள் கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தினர். இதில், பங்கு சந்தையில் முதலீடு செய்வதாக கூறி, கோடிக்கணக்கில் பணத்தைப் பெற்று ஏமாற்றியது தெரிந்தது.இந்நிலையில், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சென்னையில், இந்நிறுவனத்தின் இயக்குனராக செயல்பட்டு வந்த டேனியல் செல்வராஜ், 38 என்பவரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ