உயர் விளைச்சல் ரக சோள விதை மானிய விலையில் விற்பனை
அவிநாசி: அவிநாசி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு நடப்பு பருவத்திற்கான கோ-32 என்ற உயர் விளைச்சல் ரக சோள விதைகள் மானிய விலையில் கிலோ 52 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது கறவை மாடுகளின் தீவனத்திற்கும் தானிய உற்பத்திக்கும் மிகவும் ஏற்றது. ஆறு அடி உயரம் வளரக்கூடியது. அதிக புரதச்சத்து, பால் கறவை திறன் மிகுதியாக உள்ளது. அவிநாசி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் உள்ள விளைச்சல் நிலங்களில், 8 முதல் 9 குவின்டால் மகசூல் தரக்கூடியது. இனிப்பு மற்றும் புரதச்சத்துடன் இருப்பதாலும் சிறந்த தீவனப்பயிராகவும் இதனை பயன்படுத்தலாம். எனவே, இதனை விவசாயிகள் வாங்கி பயன்பெறலாம், என வேளாண்மை உதவி அலுவலர் சின்னராஜ் தெரிவித்துள்ளார்.