உயர்கல்வி வழிகாட்டுதல் நாளை முகாம் துவக்கம்
திருப்பூர்: ஆதிதிராவிடர் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்தும் நோக்கில், உயர்கல்வி வழிகாட்டி ஆலோசனை வழங்கும் முகாம், நாளை (29ம் தேதி) துவங்குகிறது.இது குறித்து, கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை: ஆதி திராவிட மாணவர்களில், 12ம் வகுப்பு படித்தவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் மற்றும் அந்த படிப்புகளை வழங்கும் உயர்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம், ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ், முதற்கட்டமாக, 29ம் தேதி இன்று துவங்கி, 30ம் தேதி மற்றும் அடுத்த மாதம், 5, 6 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது. மாவட்டத்தில் உள்ள அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், இப்பயிற்சியில் பங்கேற்று, பயன்பெற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.