டூவீலரில் சொந்த ஊர் பறக்கும் மக்கள்
பல்லடம், ; கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பலதரப்பட்ட தொழில்களை சார்ந்து, தென் மாவட்ட தொழிலாளர்கள் அதிக அளவில் தங்கி வேலை பார்க்கின்றன.முக்கிய பண்டிகைகள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில், குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பஸ் கட்டண உயர்வு மற்றும் கூட்ட நெரிசலுக்கு இடையே, குடும்பத்துடன் ஊருக்குச் செல்வதில், கடும் மன உளைச்சலை சந்திக்கின்றனர்.கூடுதல் செலவழித்து ஆம்னி பஸ்களில் சென்றால் நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும். இதனால், பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில், சொந்த ஊருக்கு செல்லும் பெரும்பாலான தொழிலாளர்கள், பொதுமக்கள், பஸ்சில் செல்வதை தவிர்த்து, குடும்பத்துடன் டூவீலரில் செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.இன்று, தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பெரும்பாலான தொழிலாளர்கள், பொதுமக்கள், கடந்த சில தினங்களாகவே ஊருக்குச் சென்று வருகின்றனர். ஏராளமானோர், பல்லடம் தேசிய நெடுஞ்சாலை வழியாக, மூட்டை முடிச்சுகளுடன் டூவீலர்களில் சென்றதைப் காண முடிந்தது.