மேலும் செய்திகள்
பஸ் ஸ்டாண்ட் அவசியம்
26-Feb-2025
உடுமலை, ; குமரலிங்கம் - ருத்ரபாளையம் இணைப்பு ரோட்டை மேம்படுத்தி, ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை, நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.மடத்துக்குளம் தாலுகா, குமரலிங்கம் பேரூராட்சி சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு சிறிய வணிக மையமாக உள்ளது. பல்வேறு தேவைகளுக்காக, குமரலிங்கத்துக்கு சுற்றுப்பகுதி மக்கள் வந்து செல்கின்றனர்.குறிப்பாக, ஆரம்ப சுகாதார நிலையம், அரசுப்பள்ளி ஆகியவை அப்பகுதியில் அமைந்துள்ளது. குமரலிங்கத்தில் இருந்து ருத்ரபாளையம் கிராமத்துக்கு இணைப்பு ரோடு உள்ளது. இந்த ரோடு, பல ஆண்டுகளாக மேம்படுத்தப்படாமல் மண்பாதையாக உள்ளது. ரோட்டில், அமராவதி பாசன கால்வாய் மற்றும் ஆறு குறுக்கிடுகிறது.முன்பு, இவ்வழித்தடத்தில் விவசாய இடுபொருட்கள் மற்றும் விளைபொருட்களை விவசாயிகள் எடுத்து வந்தனர்; கிராமத்துக்கான கூட்டுக்குடிநீர் திட்ட நீரேற்று நிலையமும் இவ்வழித்தடத்திலேயே இருந்தது.இந்த ரோடு புதுப்பிக்கப்படாமல் மண் பாதையாக மாறியுள்ள நிலையில் ஆற்றை கடக்க, தரைமட்ட பாலம் கூட இல்லாமல், மக்கள் பாதித்து வருகின்றனர். ஆற்றில் நீரோட்டம் இருக்கும் போது அவ்வழியாக செல்ல முடியாது.எனவே ருத்ரபாளையத்தில் இருந்து பல கி.மீ., துாரம் சுற்றி, குமரலிங்கத்துக்கு வர வேண்டியுள்ளது. எனவே, இணைப்பு ரோட்டை மேம்படுத்தி, பாசன கால்வாய் மற்றும் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.இதனால், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு எளிதாக வந்து செல்ல முடிவதுடன், விவசாயிகளும் பயன்பெறுவார்கள். இது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் தொடர்ந்து கோரிக்கை மனு அனுப்பி வருகின்றனர்.
26-Feb-2025