மருத்துவமனைகள் மேம்பாடு: மாவட்ட நிர்வாகம் ஆலோசனை
- நமது நிருபர் -திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவது தொடர்பாக, மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.திருப்பூர் மாவட்டத்தில், ஜல்லிப்பட்டி, மடத்துக்குளம், உடுமலை உட்பட 9 அரசு மருத்துவமனைகள் செயல்படுகின்றன. இவற்றில், ஸ்கேன், இ.சி.ஜி., அல்ட்ரா ஸ்கேன், புற மற்றும் உள் நோயாளிகள் சிகிச்சைப்பிரிவு, அறுவை சிகிச்சை, அவசர விபத்து சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மேலும் கூடுதல் உபகரணங்கள், படுக்கை வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பான ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில், மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் மீரா, முதன்மை மருத்துவர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.