உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருவாசக பதிகம் பாடுவது எப்படி? தெளிவுபடுத்தும் கடவுள் மாமுனிவர்

திருவாசக பதிகம் பாடுவது எப்படி? தெளிவுபடுத்தும் கடவுள் மாமுனிவர்

திருப்பூர்; கொங்கு மண்டல ஆடல் வல்லான் அறக்கட்டளை சார்பில், மணிவாசகரின் வரலாற்றை கூறும், 'திருவாதவூரடிகள் புராணம்' தொடர் பொற்பொழிவு, திருப்பூர் ஹார்வி குமாரசாமி மண்டபத்தில், கடந்த ஆக., 20 ல் துவங்கி நடைபெற்று வருகிறது.வாரந்தோறும் செவ்வாய் கிழமை மாலை, 5:00 முதல் இரவு, 7:00 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், சைவ சித்தாந்த ஆசிரியர் சிவசண்முகம், சொற்பொழிவாற்றி வருகிறார்.நேற்றைய நிகழ்ச்சியில் சிவசண்முகம் பேசியதாவது:மாணிக்க வாசக சுவாமி கள், நமச்சிவாய வாழ்க என்று சிவபுராணம் பாடினார். திருவாசகம் எந்த முறையில், எந்த வரிசையில் பாடப்பட்டது என்கிற குழப்பம் இருந்து கொண்டிருக்கிறது.சிவபுராணம், கீர்த்தி திரு அகவல், திரு அண்டப்பகுதி என்கிற வரிசையில் இருக்கிறது. சுவாமிகள் அந்த வரிசையில்தான் பாடினாரா, அல்லது தொகுத்தவர்கள், அந்த வரிசையில் அமைத்தார்களா என்கிற சந்தேகம் எழுகிறது.திருவாதவூரடிகள் புராணத்தின் ஆசிரியரான, கடவுள் மாமுனிவர், இந்த வரிசையில்தான் பாடப்பட்டது என பதில் கூறுகிறார். அந்த வரிசையைதான் நாம் பின்பற்றி வருகிறோம். திருஉத்தர கோச மங்கையில், நீத்தல் விண்ணப்பம் பாடினார்; திருவிடை மருதுார் சென்று வழிபாடு செய்துவிட்டு, திருவாரூரில் திருப்புலம்பல் பாடினார்.சீர்காழி சென்று, பிடித்தபத்து பாடினார். மாணிக்க வாசக சுவாமிகள் தனது பயணத்தில் அடுத்ததாக, தில்லை, திருக்கழுகுன்றம் வருகிறார். அங்கு பாடிய பதிகங்களையெல்லாம், கடவுள் மாமுனிவர் வரிசைப்படுத்தி தருகிறார்.இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை