மேலும் செய்திகள்
ஸ்டாலின் - பழனிசாமி வருகை ஓங்கப்போவது யார் 'கை?'
05-Aug-2025
'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி, திருப்பூருக்கு விரைவில் வரவுள்ளார். இங்கு திரளும் கூட்டத்தை கண்டு, தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் மிரள வேண்டும் என்பதை இலக்காக அ.தி.மு.க.,வினர் கொண்டுள்ளனர். இதற்காக ஏழு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய ஆலோசனைக்கூட்டம், திருப்பூரில் நடந்தது. எம்.எல்.ஏ.,க்கள் ராதாகிருஷ்ணன், ஆனந்தன், தாமோதரன், விஜயகுமார், மகேந்திரன், முன்னாள் எம்.பி., சிவசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தலைமை நிலைய செயலர் வேலுமணி பேசும் போது,''210 தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றி பெறும்; இதில், கொங்கு மண்டலத்தில் உள்ள, 22 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும். பேரூர், நகர, ஒன்றிய, பகுதி பொறுப்பாளர்களாக, 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு அதிகம் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த வயதில் பொறுப்புக்கு வருபவர்கள், இனி, 4 தேர்தலில் பணியாற்றுவர் என்பது தான், பழனிசாமியின் கணக்கு. எனவே, மூத்த கட்சியினர் அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து, அவர்களை பட்டை தீட்ட வேண்டும்'' என்றார். ''கடந்த, 2010ல் அ.தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்த போது, ஜெயலலிதா, கோவையில் பிரம்மாண்டமாக கட்சியினரை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினார். அதன் பிறகு தான், 'தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும்' என, பத்திரிகைகளே எழுத துவங்கின. அதன்படி, அ.தி.மு.க., வெற்றி பெற்று, ஜெயலலிதா முதல்வரானார். அந்த 'சென்டிமென்ட்' அடிப்படையில் தான், கட்சி பொது செயலர் பழனிசாமி, தனது தேர்தல் பிரசார மக்கள் சந்திப்பு பயணத்தை கோவையில் துவக்கியுள்ளார். தி.மு.க., ஒரு தேர்தலில் வெற்றி பெற்றால், அடுத்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறாது'' என 'சென்டிமென்ட்'களை அடுக்கினார் வேலுமணி. --- திருப்பூரில் நடந்த அ.தி.மு.க., ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்றோர். லட்சம் பேரை திரட்டினால்தான் எம்.எல்.ஏ.,வுக்கு அழகு திருப்பூர் வடக்கு தொகுதிக்கு கட்சி பொதுச்செயலரின் சுற்றுப்பயணத்துக்கு, குறைந்தது, ஒரு லட்சம் பேரையாவது, அந்த தொகுதி எம்.எல்.ஏ., திரட்ட வேண்டும்; இதுதான், அவர் 10 ஆண்டுகள் எம்.எல்.ஏ.,வாக இருப்பதற்கு அழகு. இந்த இலக்கை எட்ட அவருக்குத் துணையாக, கட்சியின் முன்னாள், இன்னாள் எம்.எல்.ஏ., எம்.பி., உள்ளாட்சி பிரதநிதிகள் என அனைவரும் துணை நிற்க வேண்டும். - பொள்ளாச்சி ஜெயராமன், தேர்தல் பிரிவு செயலாளர்.
05-Aug-2025