விடுமுறையை கழிச்சாச்சு... நண்பர்களை பார்த்து நாளாச்சு
இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், வெளியூரில் இருந்து திருப்பூர் வந்தவர்கள், பள்ளிக்கு தேவையான பல்வேறு பொருட்களை வாங்க நகருக்குள் படையெடுத்தவர்களால் மத்திய பஸ் ஸ்டாண்டில் கூட்டம் நிரம்பியது.நேற்று காலை முதலே வெளியூரில் இருந்து திருப்பூர் வரும் பஸ்களில் கூட்டம் அதிகரித்திருந்தது. பெற்றோர் பலர் குழந்தைகளை அழைத்துக் கொண்டு, சொந்த மாவட்டங்களில் இருந்து திருப்பூர் திரும்பினர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் சிறப்பு பஸ்கள் இயக்கிய போதும், நேற்று காலை முதல் மாலை வரை தான் கூட்டம் அதிகமாக இருந்ததாக, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.டவுன் பஸ்கள் நிற்கும் 'ரேக்', பயணிகள் கூட்டத்தால் நிரம்பியிருந்தது.கோடை விடுமுறை கழிந்துள்ள நிலையில், பள்ளிகளுக்கு சென்று, தங்கள் நண்பர்களை பார்க்கும் ஆர்வத்துடன் குட்டீஸ் உள்ளனர்.