உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆர்ப்பரிக்கும் பஞ்சலிங்கம் அருவி; பக்தர்கள் வருகை அதிகரிப்பு

ஆர்ப்பரிக்கும் பஞ்சலிங்கம் அருவி; பக்தர்கள் வருகை அதிகரிப்பு

உடுமலை; திருமூர்த்திமலை பஞ்சலிங்கம் அருவியில், கோடையிலும் குளிர்ச்சியான நீர் விழுவதால், சுற்றுலா பயணியர், பக்தர்கள் வருகை அதிகளவு காணப்படுகிறது.உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், மலைமேல் பஞ்சலிங்கம் அருவி, மலையடிவாரத்தில், தோணியாற்றின் கரையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்தி அணை என சுற்றுலா மற்றும் ஆன்மிக மையமாக உள்ளது.கடந்த இரு மாதமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில், திருமூர்த்திமலை பஞ்சலிங்கம் அருவியில், மூலிகை குணங்களுடன் கூடிய குளிர்ச்சியான நீர் விழுந்து வருவதால், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.தற்போது, கிராமங்களிலுள்ள கோவில்களில், பங்குனி, சித்திரை மாதங்களில் ஆண்டு திருவிழா கொண்டாடப்பட்டு வருவதால், பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்து, தீர்த்தம் எடுத்து செல்கின்றனர்.இதனால், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணியர் வருகையால், திருமூர்த்திமலை களைகட்டியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை