மேலும் செய்திகள்
குளம் அருகே அங்கன்வாடி தடுப்பு இல்லாததால் அச்சம்
30-Jul-2025
உடுமலை; உடுமலை பார்க்ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளி அங்கன்வாடி மையத்தில், சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. உடுமலை பார்க்ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில், அங்கன்வாடி மையம் உள்ளது. அந்த அங்கன்வாடி மையத்தில், 20 குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர். சுதந்திர தின விழாவையொட்டி குழந்தைகள் நேரு, காந்தி, அம்பேத்கர், வேலுநாச்சியார், சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட விடுதலை போராட்ட வீரர்களை போல வேடமிட்டு வந்தனர். குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளி ஆசிரியர்கள், சுதந்திர போராட்ட வரலாறு குறித்து பேசினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அங்கன்வாடி பணியாளர்கள் செய்திருந்தனர். இதே போல், உடுமலை நகரிலுள்ள பிற அங்கன்வாடி மையங்களிலும், சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில், குழந்தைகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும், விழிப்புணர்வு நாடகங்களும் நடத்தப்பட்டன. இவற்றை பெற்றோர்கள் கண்டு ரசித்தனர்.
30-Jul-2025