உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரூ.50 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணி துவக்கம்

ரூ.50 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணி துவக்கம்

அவிநாசி;அவிநாசி பேரூராட்சியில், 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ், 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் துவக்கி வைக்கப்பட்டது.பேரூராட்சி, 6வது வார்டு, நேரு வீதியில், 3 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி, 10 மற்றும் 12வது வார்டு கஸ்துாரிபாய் வீதி, சீனிவாசபுரம் ஜே.ஜே.கார்டன் ஆகிய பகுதிகளில் தார் சாலை அமைத்தல் திடக்கழிவு மேலாண்மை பணிக்கு டிராக்டர் வாங்குதல் என, 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் துவங்கப்பட்டன.நிகழ்ச்சிக்கு, திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் தனலட்சுமி முன்னிலை வகித்தார். நகர தி.மு.க., செயலாளர் வசந்தகுமார், ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன்நம்பி, பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன், கவுன்சிலர்கள் திருமுருகநாதன், பரஹத்துல்லா, கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி