திருப்பூர் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா துவக்கம்
திருப்பூர் ; திருப்பூர் - காலேஜ் ரோடு, ஸ்ரீஐயப்பன் கோவிலில், 65ம் ஆண்டு மண்டல பூஜை விழா, கோலாகலமாக துவங்கியது; ஏராளமான பக்தர்கள், நேற்றைய அன்னதானத்தில் பங்கேற்றனர்.ஸ்ரீஐயப்பன் கோவிலில், ஸ்ரீதர்ம சாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீஐயப்பன் பக்த ஜனசங்கம் சார்பில், 65ம் ஆண்டு மண்டல பூஜை விழா, வரும் 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. நவகலச அபிேஷகம், 108 வலம்புரி சங்காபிேஷகம், பறையெடுப்பு என, தினசரி பூஜைகள் நடக்க உள்ளன.வரும், 25ம் தேதி, பவானி கூடுதுறையில், ஐயப்ப சுவாமி ஆராட்டு விழா நடக்கிறது. அன்று மாலை, 6:30 மணிக்கு, திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் இருந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் ஐயப்ப சுவாமி ஊர்வலம் நடைபெறும். மண்டல பூஜையை முன்னிட்டு, தினமும், மாலை, 6:30 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.மண்டலாபிேஷக பூஜையின் முக்கிய நிகழ்ச்சியாக, ஞாயிறுதோறும் கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் சார்பில், அன்னதானம் வழங்கப்படுகிறது.நேற்று முதல் அன்னதானம் துவங்கியது. காலை, 11:00 மணிக்கு, மகேஸ்வர பூஜையுடன் அன்னதானம் துவங்கியது. நேற்றைய அன்னதானத்தில், ஐந்தாயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சாப்பிட்டனர்.விழா ஏற்பாடுகளை, தலைவர் நாச்சிமுத்து, துணை தலைவர் மோகன்ராஜ், பொதுசெயலாளர் மணி, இணை செயலாளர் சிவக்குமார், பொருளாளர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் அடங்கிய ஸ்ரீதர்மசாஸ்தா டிரஸ்ட் செய்து வருகிறது.