உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாகுபடிக்கு இடுபொருட்கள்;மலைகிராம மக்கள் எதிர்பார்ப்பு

சாகுபடிக்கு இடுபொருட்கள்;மலைகிராம மக்கள் எதிர்பார்ப்பு

உடுமலை; பருவமழைக்கு பிறகு சாகுபடியை துவக்க, வேளாண்துறை வாயிலாக இடுபொருட்கள் வழங்க வேண்டும் என, மலைவாழ் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரக பகுதியில், 13க்கும் மேற்பட்ட மலைவாழ் குடியிருப்புகள் உள்ளன. இரு மலைத்தொடர்களுக்கு, இடையிலுள்ள சமவெளிப்பகுதியில், அங்கு வசிக்கும் மக்கள், விவசாயம் செய்து வருகின்றனர்.அப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக இச்சாகுபடி உள்ளது. முன்பு விதை உள்ளிட்ட இடுபொருட்கள் கிடைக்காமல், பாதிக்கப்பட்டு வந்தனர்.கடந்த, 2016ல், உடுமலை வட்டார வேளாண்துறை சார்பில், குழிப்பட்டி, மாவடப்பு, பூச்சிகொட்டம்பாறை உட்பட மலைவாழ் கிராமங்களில், சிறுதானிய சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், சிறப்புத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.அப்பகுதியில், 150 ெஹக்டேரில் சாகுபடி மேற்கொள்ள, ராகி, வரிமொச்சை, சாமை ஆகிய விதைகள் வழங்கப்பட்டன. மேலும், வேம்பு மருந்து உட்பட இடுபொருட்களும் மானியத்தில் வழங்கப்பட்டு, சாகுபடியில் நல்ல விளைச்சல் கிடைத்தது.அதன்பின்னர், திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. தற்போது, மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் பரவலாக மழை பெய்து, சிற்றாறுகளில் நீரோட்டம் உள்ளதால், சாகுபடியை மேற்கொள்ள மலைவாழ் கிராம மக்கள் ஆர்வமாக உள்ளனர்.ஆனால், விதை உட்பட போதிய இடுபொருட்கள் இல்லை. விதைப்பை மேற்கொள்ள, வட்டார வேளாண்துறை சார்பில், மானியத்திட்டங்களின் கீழ், இடுபொருட்கள் வழங்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ