உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பூச்சி தாக்குதல் எதிரொலி குட்டை தென்னைக்கு பாதிப்பு

பூச்சி தாக்குதல் எதிரொலி குட்டை தென்னைக்கு பாதிப்பு

பொங்கலுார்: சில ஆண்டுகளுக்கு முன்பு இளநீர் என்றால் செவ்விளநீர் என்ற நிலை இருந்தது. அந்த அளவுக்கு அவை சந்தையை ஆக்கிரமித்து இருந்தன. ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அவற்றைக் காண்பதே அரிதாக உள்ளது.தென்னையை பல்வேறு நோய்கள் தாக்கி வருகிறது. அவற்றில் மிகவும் முக்கியமானது வெள்ளை ஈக்கள் ஆகும். வெள்ளை ஈக்கள் மரத்தின் இலைகளில் பச்சையத்தை உறிஞ்சி விடுகின்றன.அவற்றின் கழிவுகளை ஓலையின் வெளிப்புறத்தில் பரப்பி விடுவதால் ஓலைகள் கருப்பு நிறத்திற்கு மாறி விடுகின்றன. இதனால், ஒளிச்சேர்க்கை தடைபட்டு தென்னை மரங்கள் காய்ப்பு திறனை இழந்து வருகின்றன.இவற்றில் நாட்டு ரகங்கள் ஓரளவு தாக்குப்பிடித்து நிற்கின்றன. ஆனால், இளநீருக்காகவே சாகுபடி செய்யப்பட்ட அதிக இனிப்பு சுவையுடன் கூடிய குட்டை ரகங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை இழந்து குற்றுயிரும், குலையுயிருமாக காட்சியளிக்கின்றன. செவ்விளநீர் அதிக விலைக்கு விற்பனையானதாலும் அதிக அளவில் இளநீர் கிடைத்ததாலும் அவற்றை பொதுமக்களும் விரும்பி வாங்கினர். தற்பொழுது அவற்றில் பூச்சி தாக்குதல் காரணமாக செவ்விள நீர் ரகங்கள் கிட்டத்தட்ட அழிந்து விட்டன. லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து குட்டை ரகங்களை நட்ட விவசாயிகள் இப்போது விழி பிதுங்கி நிற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி