மேலும் செய்திகள்
நால் ரோட்டில் ரவுண்டானா அமைக்க வலியுறுத்தல்
12-Feb-2026
உடுமலை: போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, மடத்துக்குளம் நால்ரோட்டில் ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், அமைந்துள்ள மடத்துக்குளம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. அங்கு நால்ரோட்டில் கணியூர் ரோடு, குமரலிங்கம் ரோடும், பொள்ளாச்சி, பழநி ரோடுகளும் சந்திக்கின்றன. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, அங்கு ரவுண்டானா அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
12-Feb-2026