உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தமிழில் பெயர்ப்பலகை வைக்க அறிவுறுத்தல்

தமிழில் பெயர்ப்பலகை வைக்க அறிவுறுத்தல்

உடுமலை; உடுமலை நகராட்சி பகுதியிலுள்ள வணிக நிறுவனங்களில், தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது.வணிக நிறுவனங்களில், தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும், என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.அதன் அடிப்படையில், உடுமலை நகராட்சி பகுதியிலுள்ள வணிக நிறுவனங்களில், தமிழில் பெயர்ப்பலகை அமைப்பது குறித்து, வணிக நிறுவன உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.நகராட்சித்தலைவர் மத்தீன் தலைமை வகித்தார். கமிஷனர் சரவணகுமார், தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் ராஜவேல் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.இதில், கடைகள், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும். தமிழில் பெயர்ப்பலகை இல்லாத, வணிக நிறுவனங்களுக்கு குறைந்தபட்சம், ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.அனைத்து வணிக நிறுவனங்களும் தங்களது கடைகளுக்கு தமிழில் முன்னுரிமை கொடுத்து பெயர் வைக்கவும், அதற்கு அடுத்தபடியாக சிறிய வடிவில் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் பெயர் வைத்துக்கொள்ளலாம், என அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை