உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை

வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை

திருப்பூர், : சமீப நாட்களாக தென்னையில் வெள்ளை ஈ பூச்சி தாக்குதல் அதிகரித்திருப்பதாகவும், இதனால் மகசூல் பாதிப்பு ஏற்படுவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.வேளாண் விஞ்ஞானிகள் கூறியதாவது:தென்னை மரங்களில் வெள்ளை ஈ பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, மரங்களின் வேர் மற்றும் மரத்தை சுற்றி மருந்து ஊற்றக்கூடாது. மாறாக, ஒரு ஏக்கருக்கு, 2 இடத்தில், 4 அடி உயரத்தில், 60 'வாட்ஸ்' மஞ்சள் பல்பு கட்டி தொங்கவிட வேண்டும். மரத்தின் கீழே, 4 லிட்டர் அளவுக்கு நீர் நிரப்பிய தொட்டி வைத்து, அதில், வேப்ப எண்ணெய், கெரசின் ஊற்றி வைக்க வேண்டும். மாலை, 6:00 முதல், இரவு, 9:00 மணி வரை, அதிகாலை, 4:00 முதல், 6:00 மணி வரை அந்த விளக்கை எரிய வைக்கும் போது, மஞ்சள் வெளிச்சத்தில் வெள்ளை ஈக்கள் ஈர்க்கப்பட்டு, நீரில் விழுந்து விடும்.பகல் நேரத்தில், மஞ்சள் வண்ண அட்டையின் இரு புறமும், விளக்கெண்ணெய் தடவி, மரங்களில் தொங்க விடும் போது, சூரிய ஒளியின் வெளிச்சத்தில் வெள்ளை ஈக்களை மஞ்சள் வண்ண அட்டை ஈர்த்து, விழுந்து விடும். தென்னை தோட்டத்தில் மரங்களுக்கு இடையே தட்டைப்பயிர் சாகுபடி செய்ய வேண்டும். அவை வளர்ந்த பின், ஏராளமான அசுவினி பூச்சிகள் வரும்; அவற்றை உண்பதற்கு பொறி வண்டுகள் வரும். இவை, நன்மை பயக்கும் பூச்சியினமாகும். ஒரு தென்னை மரத்துக்கு, 5 கிலோ குப்பை மண்ணில், வேப்பம் புண்ணாக்கு கலந்து, மரத்தில் இருந்து, 4 அடி தள்ளி இட வேண்டும். இத்தகைய ஒருங்கிணைந்த மேலாண்மை வாயிலாக வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ