சர்வதேச பேரிடர் குறைப்பு தினம்; மாணவர்களுக்கு பயிற்சி
உடுமலை : உடுமலை தீயணைப்புத்துறை சார்பில், மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு, பேரிடர் மேலாண்மை போலி ஒத்திகை பயிற்சி முகாம் நடந்தது.நிலைய அலுவலர் லட்சுமணன், தாசில்தார் பானுமதி, உதவி தலைமை ஆசிரியர் பத்ரி நாராயணன் மற்றும் ஆசியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். இதில் மழை, பெரு வெள்ளம், புயல், நில நடுக்கம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பேரிடரில் சிக்கியவர்களை மீட்பது குறித்து, தீயணைப்பு வீரர்களும், முதல் உதவி சிகிச்சை குறித்து, சுகாதாரத்துறையினரும் பயிற்சி அளித்தனர்.