உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முதலீட்டுக்கு அதிக லாபம் ஆசை காட்டியவரிடம் விசாரணை

முதலீட்டுக்கு அதிக லாபம் ஆசை காட்டியவரிடம் விசாரணை

திருப்பூர்; பங்குசந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி, எட்டு லட்சம் ரூபாயை மோசடி செய்த கும்பல் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.திருப்பூரை சேர்ந்தவர் கண்ணன், 42. இவர் தனது 'பேஸ்புக்' பக்கத்தில் கடந்த டிச., மாதம் விளம்பரம் ஒன்று வந்தது. அதில், பங்குசந்தையில் முதலீடு செய்தால், கூடுதல் லாபம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இதனை நம்பிய கண்ணன், விளம்பரத்தில் உள்ளபடி வாட்ஸ்-அப்பில் இணைந்தார். குறிப்பிட்ட கணக்கில் பணத்தை முதலீடு செய்தால் லாபம் அதிகம் கிடைக்கும் என நம்பி, அந்த கணக்குக்கான மொபைல் ஆப்பை டவுன்லோடு செய்து, பல்வேறு தவணைகளாக, எட்டு லட்சம் ரூபாயை செலுத்தினர்.அந்த பணத்தை எடுக்க முயன்ற போது, மேலும், 20 லட்சம் ரூபாயை செலுத்தினால் தான் பணம் எடுக்க முடியும் என, தெரிவிக்கப்படவே அதிர்ச்சியடைந்தார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து, திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளிதார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !