மேலும் செய்திகள்
கருணாநிதி பிறந்த நாள் மா.செ., அழைப்பு
02-Jun-2025
திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க., செயலாளர் செல்வராஜ் அறிக்கை:முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்த நாள், செம்மொழி நாள் விழாவாக கொண்டாட கட்சி தலைவர் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மத்திய மாவட்டம் முழுவதும் அனைத்து கிளைகளிலும் கட்சிக் கொடியேற்றி, கருணாநிதி படத்துக்கு மரியாதை செலுத்தி கட்சியினர் கொண்டாட வேண்டும்.எளிய மக்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், ஆதரவற்ற நிலையில் உள்ளிட்டோருக்கும் நலத்திட்ட உதவி வழங்குதல்; துாய்மைப் பணியாளர்களுக்கு உணவு, உடை வழங்குதல்; மாணவர்கள், இளைஞர்களுக்கு கலைஇலக்கிய போட்டி, விளையாட்டு போட்டி நடத்தி பரிசளித்தல் உள்ளிட்டவை ஏற்பாடு செய்ய வேண்டும். உரிய பகுதி கட்சி நிர்வாகிகள் இதில் முழுமையாக பங்கேற்க வேண்டும்.
02-Jun-2025