மேலும் செய்திகள்
மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
05-Feb-2025
உடுமலை; வேலை உறுதியளிப்பு திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இ.கம்யூ., சார்பில், குடிமங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்துக்கு, இ.கம்யூ., கட்சியின் குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் இசாக், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.'மத்திய பட்ஜெட்டில், விவசாயிகளை பாதிக்கும் வகையில், உர மானியத்தை குறைத்துள்ளனர். தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்துக்கு, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிடவில்லை,' என பேசினர். தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களை நிதி ஒதுக்கீட்டில் புறக்கணித்துள்ளதாக, மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர். கட்சியின் உடுமலை ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பேசினர்.
05-Feb-2025