உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கால்வாய்களை சீரமைக்க பாசன சபையினர் மனு  

கால்வாய்களை சீரமைக்க பாசன சபையினர் மனு  

உடுமலை; பி.ஏ.பி., பகிர்மான கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என, விவசாயிகள் சார்பில், திருப்பூர் மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டது.ஏ.நாகூர் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் சார்பில், தலைவர் விஜயமோகன், திருப்பூர் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:பி.ஏ.பி., புதுப்பாளையம் கிளை கால்வாயின் கீழ், ஏ.நாகூர் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கத்துக்குட்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதற்காக கிளை கால்வாயில் இருந்து ஆறு பகிர்மான கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.நீண்ட காலமாக பகிர்மான கால்வாய் பராமரிப்பில்லாததால், பல இடங்களில் கரைகள் சரிந்து விட்டது. அப்பகுதி முழுவதும் களிமண் பரப்பாக இருப்பதால், கால்வாய் வலுவிழந்து நீர் நிர்வாகத்தில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.மடை ஷட்டர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. விளைநிலங்களுக்கு செல்லும் மண் கால்வாய்கள், துார்வாரப்படாமல் மண்மேடாக மாறி வருகிறது. நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களின் பாசன ஆதாரமாக உள்ள, பகிர்மான கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை