உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாசன நீர் கிடைக்கல; அதிகாரிகள் கண்டுக்கல! விவசாயிகள் மறியல் போராட்டம்

பாசன நீர் கிடைக்கல; அதிகாரிகள் கண்டுக்கல! விவசாயிகள் மறியல் போராட்டம்

உடுமலை: விளைநிலங்களுக்கு பாசன நீர் கிடைக்காதது குறித்து பல முறை புகார் தெரிவித்தும் பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்காததால், தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், குடிமங்கலம் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனம், உடுமலை கால்வாய் வாயிலாக குடிமங்கலம் பகுதியில், நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மக்காச்சோளம் உள்ளிட்ட சாகுபடிகளை விவசாயிகள் மேற்கொள்கின்றனர்.இதில், புது குடிமங்கலம் பகிர்மான கால்வாயில், முதல் சுற்றிலேயே பற்றாக்குறையாக பாசன நீர் வினியோகிக்கப்பட்டதால், கடைமடையிலுள்ள விளைநிலங்கள் பாதிக்கப்பட்டன.இந்நிலையில், இரண்டாம் சுற்று துவங்கியதும், போதுமான பாசன நீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.ஆனால், நடவடிக்கை எடுக்கப்படாமல், புது குடிமங்கலம் பகிர்மான கால்வாயில், போதியளவு தண்ணீர் வரவில்லை.இது குறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், மடை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.இருப்பினும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வரவில்லை; விவசாயிகளின் போன் அழைப்பையும் ஏற்கவில்லை.இதனால், ஆவேசமடைந்த விவசாயிகள் பொள்ளாச்சி - தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், குடிமங்கலம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்துக்கு வந்த குடிமங்கலம் போலீசார், பொதுப்பணித்துறையினர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.பாசன நீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு கூடுதலாக 7 மணி நேரம் பாசன நீர் வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர். போராட்டத்தால், தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ