உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பூட்டி வைப்பதற்கா அவசர கால வழி?  அரசு மருத்துவமனையில் அவலம்

பூட்டி வைப்பதற்கா அவசர கால வழி?  அரசு மருத்துவமனையில் அவலம்

திருப்பூர்:திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அவசர கால வழி பூட்டியே வைக்கப்படுவதால், ஆம்புலன்ஸ்கள் வந்து செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவு முன்புறமும் வாகனங்கள் முறையின்றி நிறுத்தப்படுவதால், அவசர காலங்களில் இடையூறு ஏற்படும் நிலை உள்ளது.தாராபுரம் ரோட்டில் உள்ள மருத்துவமனையில், புற்றுநோய் பிரிவு கட்டுமானப் பணிகள் நடப்பதால் மகப்பேறு பிரிவு அருகே உள்ள இரண்டாவது நுழைவு வாயில் பூட்டப்பட்டுள்ளது. இதனால் ஐ.டி.ஐ., எதிரே உள்ள முதல் நுழைவு வாயில் வழியாகவே அனைத்து வாகனங்களும் செல்கின்றன.இதற்கிடையே, அவசர சிகிச்சைப் பிரிவுக்கு 108 ஆம்புலன்ஸ்கள் விரைந்து செல்லும் வகையில், தாராபுரம் ரோடு ரவுண்டானாவில் இருந்து குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் பின்புறம் புதிய அவசர கால வழி அமைக்கப்பட்டது. தார், சிமென்ட் சாலை அமைக்கப்பட்டும், பெரும்பாலான நேரங்களில் இவ்வழி பூட்டியே வைக்கப்படுகிறது.

Galleryஇதனால் தீவிர சிகிச்சைப் பிரிவு முன்பு ஆம்புலன்ஸ்கள் செல்ல முடியாத வகையில் டூவீலர், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. எனவே, அவசர கால வழியை எப்போதும் திறந்து வைத்து, ஆம்புலன்ஸ்கள் தடையின்றி சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை