மேலும் செய்திகள்
புகையில்லா போகி பண்டிகை கோவை கலெக்டர் வேண்டுகோள்
12-Jan-2025
திருப்பூரில் பின்னலாடை மற்றும் இதைச் சார்ந்த 'ஜாப்ஒர்க்' நிறுவனங்கள் ஏராளம் உள்ளன. போகி பண்டிகையையொட்டி நிறு வனங்களில் துாய்மைபணிகள் நடைபெற்று வருகின்றன.நிறுவனங்களிலிருந்து வெளியேறும் கழிவு பேக்கிங் பொருட்கள், எம்ப்ராய்டரி கழிவு, போம் கழிவுகள் மற்றும் குடியிருப்பு பகுதி மக்கள், பழைய துணி, பிளாஸ்டிக் கழிவுகளை எரிக்கின்றனர். இதனால், நச்சு புகை உருவாகி, காற்று மாசு ஏற்படுகிறது. புகையில்லாத போகி கொண்டாடவேண்டும் என, மாவட்ட நிர்வாகமும், மாசுகட்டுப்பாடு வாரியமும் அறிவுறுத்தியுள்ளன.போகிப்பண்டிகை நாளில், டயர், ரப்பர், பிளாஸ்டிக், ஒயர், பின்னலாடை உற்பத்தி நிறுவன கழிவுகளை எரிப்பதை திருப்பூர் பகுதி மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் புகை மூட்டம் உருவாகி, மக்களுக்கு சுவாச நோய்கள், இருமல், நுரையீரல், கண், மூக்கு எரிச்சல் ஏற்படுகிறது. புகையால் வளிமண்டலத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்து, சுவாசிக்கும் காற்றில் நச்சுப்பொருட்கள் அளவு அதிகரிக்கிறது.போகியன்று, டயர், பிளாஸ்டிக், ரப்பர், தொழிற்சாலை கழிவு உள்ளிட்டவற்றை எரிக்க கூடாது; மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குப்பையை உரியமுறையில் அகற்றி, மாசு இல்லாத பொங்கல் கொண்டாட வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
12-Jan-2025