உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பேட்டரி வாகனங்கள் பழுது துாய்மை பணியில் தொய்வு? சுகாதாரம் கெடுவதற்கு வாய்ப்பு?

பேட்டரி வாகனங்கள் பழுது துாய்மை பணியில் தொய்வு? சுகாதாரம் கெடுவதற்கு வாய்ப்பு?

திருப்பூர் : மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் சிறப்பு நிலை ஊராட்சிகளில் துாய்மைப்பணி மேற்கொள்ள 'பேட்டரி' வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.இவற்றில் பெரும்பாலான வாகனங்கள் செயல்பாட்டிற்கு வந்த சில மாதங்களிலேயே பழுதாகியுள்ளன. வாகனங்கள் மேல் தோற்றத்தில் புதிது போல் காட்சியளித்தாலும், அவை பழுதாகி உள்ளாட்சி அலுவலகங்களின் பின் அல்லது குப்பை கிடங்குகளின் அருகில் நிறுத்தப்பட்டுள்ளன.பழுதான 'பேட்டரி' வாகனங்களை பழுதுநீக்க பிரத்யேக நிதி ஒதுக்கீடு எதுவும் இல்லாததால், உள்ளாட்சி நிர்வாகங்களின் சுகாதாரப்பிரிவினர் அல்லது, அந்த வாகனங்களை இயக்கும் துாய்மைப் பணியாளர்களே பழுதுநீக்கும் நிலையையும் பல இடங்களில் பார்க்க முடிகிறது. 'பேட்டரி' வாகனங்களை சப்ளை செய்தவர்கள் தான், பழுதுநீக்கும் பணியையும் மேற்கொள்ள வேண்டும்' என்ற சூழலில், அவர்களும் அதனை பொருட்படுத்துவதில்லை; அவர்களை தொடர்பு கொள்வதே அரிதாக இருக்கிறது' என்கின்றனர், உள்ளாட்சி நிர்வாகத்தினர். இதனால், வீதி, தெருக்கள் தோறும் சென்று குப்பை சேகரிப்பது, அகற்றுவது உள்ளிட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ