லாக்கர் வசதி உள்ளதா?
நல்லுார் நுகர்வோர் நல மன்ற தலைவர் சண்முக சுந்தரம், கலெக்டரிடம் அளித்த மனு:திருப்பூரிலுள்ள பனியன் தொழிலாளர்கள், அவசர நிதி தேவைகளுக்கு, தனியார் நகை அடகு கடைகளை நாடி கடன் பெறுகின்றனர். திருப்பூரில் பெரும்பாலான கடைகளில், நகைகளை பாதுகாப்பதற்கான லாக்கர் வசதிகள் இருப்பதில்லை. அடகு வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படுகிறது.சிலர், அடமான நகைகளை சுருட்டிவிட்டு தலைமறைவாகி விடுகின்றனர். இதனால், ஏழைகள் தங்கள் நகைகளை இழந்து பரிதவிக்கின்றனர். வருவாய்த்துறை அதிகாரிகள், நகை அடகு கடைகளில் லாக்கர் வசதி உள்ளதா; முறையான அனுமதி பெற்று இயங்குகின்றனவா என ஆய்வு செய்யவேண்டும். பாதுகாப்பு இல்லாத, அனுமதி பெறாமல் இயங்கும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.