உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கட்டுமானப்பொருட்கள் விலை கட்டுப்படுத்துவது கட்டாயம்

கட்டுமானப்பொருட்கள் விலை கட்டுப்படுத்துவது கட்டாயம்

திருப்பூர் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் அளித்த மனு: கடந்த ஆறு மாதம் முன் உயர்த்தப்பட்ட கட்டுமான பொருட்கள் விலை அடிப்படையில், மாநகராட்சியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, கட்டுமான பணிகள் மேற்கொண்டு வருகிறோம். கிரசர் உரிமையாளர் சங்கம், ஜல்லி யூனிட் 4 ஆயிரம் ரூபாய், எம்.சாண்ட், 5 ஆயிரம் ரூபாய், பி.சாண்ட் 6 ஆயிரம் ரூபாயாகவும், வாகன வாடகை யூனிட்டுக்கு ஆயிரம் ரூபாயாக உயர்த்தி நிர்ணயம் செய்துள்ளது.உயர்த்தப்பட்ட கட்டுமான பொருட்கள் விலையில் பணிகளை மேற்கொண்டால், எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். கட்டுமான தொழில் சார்ந்த தொழிலாளர்களும் பாதிக்கப்படுவர். எனவே, கட்டுமான பொருட்கள் விலை உயர்வை வாபஸ் பெற்று, பழைய விலைக்கே விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !