மேலும் செய்திகள்
ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்
15-Feb-2025
ஈரோடு: அனைத்து அரசு ஊழியர்களுக்கும், பழைய ஓய்வூதிய திட்-டத்தை அமலாக்க வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்-பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். சிறப்பு கால முறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர் மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் எம்.ஆர்.பி., செவி-லியர், சிறப்பு ஆசிரியர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்க-ளையும் நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், முதல்வரின் தேர்தல் வாக்குறுதி-களை நிறைவேற்ற வலியுறுத்தியும், ஜாக்டோ - ஜியோ சார்பில், ஈரோடு தாலுகா அலுவலகம் முன், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன், மாவட்ட தலைவர் விக்டர் செல்வகுமார், மாநில பொருளாளர் பிரகாசம், நாகராஜன், சரவணகுார், சிவசங்கர், தணிகாசலம் உட்பட பலர் பேசினர்.இதேபோல் கோபி தாலுகா அலுவலக வளாகத்தில், மாவட்ட இணை செயலாளர் சுரேஷ் தலைமையில், அந்தியூர் தாலுகா அலு-வலகம் முன்பும், பவானி தாலுகா அலுவலகம் முன், பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ராஜகுமாரன், ஞானவேல் முன்னிலை-யிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும், இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்-டத்தில், ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஈடுபட்டனர்.* திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா அலுவலக வளா-கத்தில், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ஆறுமுகம், செந்தில் தலைமையில், 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு-பட்டனர்.
15-Feb-2025