தேர்தலில் வெற்றி; ஜெயராமன் சபதம்
திருப்பூர்; ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளர் குணசேகரன் மறைவுக்கான இரங்கல் கூட்டம், திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில் நேற்று நடந்தது.மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்து பேசுகையில், ''மக்கள் பணியாற்றிய குணசேகரன் இன்று நம்மிடையே இல்லை. குணசேகரனின் லட்சியத்தை நிறைவேற்றும் பணியில், கட்சியின் ஒவ்வொரு தொண்டரும் ஈடுபட வேண்டும்.அவர் விரும்பியபடி, மாநகர் மாவட்டத்தின் மூன்று தொகுதிகளிலும், 2026ல் அ.தி.மு.க., கூட்டணி வெற்றிவாகை சூட வேண்டும்'' என்றார்.பா.ஜ., மாவட்ட தலைவர் சீனிவாசன், முன்னாள் தலைவர் செந்தில்வேல், தே.மு.தி.க., மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஆனந்தன், த.மா.கா., மாவட்ட துணை தலைவர் சிவசுப்பிரமணியம், மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழக மாநில தலைவர் இப்ராஹிம் பாதுஷா, இந்திய தேசிய லீக் மாநில பொதுசெயலாளர் அஸ்லாம் உள்ளிட்டோர், குணசேகரன் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர்.அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ஆனந்தன், விஜயகுமார், ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ., பழனிசாமி, நடராஜன், பகுதி செயலாளர்கள் அன்பகம் திருப்பதி, கண்ணப்பன், பொதுக்குழு உறுப்பினர் தம்பிமனோகரன் உள்ளிட்டோர் பேசினர்.