உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அக்ஷய திருதியை விற்பனை நகைக்கடைகள் ஆயத்தம்

அக்ஷய திருதியை விற்பனை நகைக்கடைகள் ஆயத்தம்

திருப்பூர்: பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது; புதன்கிழமை வரும் அக்ஷய திருதியை நாளில், சிறப்பு விற்பனை திருவிழாவை கொண்டாட, திருப்பூர் நகைக்கடைகள் ஆயத்தமாகியுள்ளன.வரும், 30ம் தேதி அக் ஷய திருதியை; திருப்பூரில் உள்ள நகைக்கடைகள், அக் ஷய திருதியை விற்பனை மேளாவுக்கு தயாராகிவிட்டன. வழக்கம் போல், ஒவ்வொரு நகைக்கடையிலும், சிறப்பு விற்பனைக்காக முன்பதிவு கோலாகலமாக துவங்கிவிட்டது.அக்ஷய திருதியை நாளில், குறைந்தபட்சம் ஒரு கிராம் தங்கமாவது வாங்க வேண்டும் என்று பெண்கள் விரும்புவர்; தங்கம் மட்டுமின்றி வெள்ளி வாங்கவும் பலர் திட்டமிட்டுள்ளனர்.சிறப்பு விற்பனை நாளில், நகை வாங்க கூட்டம் குவியும் என்பதால், ஒவ்வொரு நகைக்கடையிலும் விரிவான ஏற்பாடுகள் துவங்கியுள்ளன. வாடிக்கையாளர்கள் வசதியாக அமர்ந்து, காத்திருந்து நகை வாங்கவும், தேவையான குளிர்பானம், டீ, காபி வழங்கவும் ஏற்பாடுகள் நடக்கின்றன.எந்தவொரு பொருள் வாங்கினாலும், அக் ஷய திருதியை சிறப்பு பரிசாக, பூஜை பொருட்கள் வழங்கவும் திட்டமிட்டுள்ளனர்.திருப்பூர் பகுதியில் உள்ள முன்னணி நகைக்கடைகள், மூன்று நாட்கள் சிறப்பு விற்பனை மேளா நடத்த தயாராகியுள்ளன.நாளை துவங்கி, புதன் வரை சிறப்பு விற்பனை நடக்கிறது. பச்சைப்பந்தல், வாழைமரம், மாவிலை தோரணம், மலர் தோரணம் என, நகைக்கடைகள் மலர் அலங்காரத்துடன் ஜொலிக்கப்போகின்றன.

எவ்வளவு ஆண்டுகளானாலும் தங்கம் விலை குறையப்போவதில்லை. மென்மேலும் விலை அதிகரித்தாலும், மக்கள் நம்பிக்கையாக வாங்கி, முதலீடு செய்கின்றனர். குறிப்பாக, அக் ஷய திருதியை நாளில் பொன் வாங்க, முன்பதிவு செய்து வருகின்றனர். மக்கள் வசதிக்காக, 28ம் தேதி(நாளை) முதல் சிறப்பு விற்பனை துவங்கி, 30ம் தேதி நள்ளிரவு வரை நடக்கும். புதன்கிழமை அக்ஷய திரிதியை வருவதால், இந்தாண்டு மிகவும் சிறப்பாக இருக்கும். அனைத்து வாடிக்கையாளருக்கும், லட்சுமி விளக்கு, காமாட்சி விளக்கு போன்ற மங்களகரமான பூஜை பொருட்கள் பரிசாக வழங்கவும், ஜூவல்லரிகள் திட்டமிட்டுள்ளன.

- செந்தில்குமார், தலைவர், திருப்பூர் மாவட்ட ஜூவல்லரி உரிமையாளர் சங்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை