உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வீட்டில் நகை திருட்டு

வீட்டில் நகை திருட்டு

பல்லடம்:பல்லடம், பனப்பாளையம், அண்ணா நகரை சேர்ந்தவர் கனகராஜ், 38. கோவையில் உள்ள ஒரு தறிகுடோனில் சூப்பர்வைசராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லிங்கஜோதி, 32. பனியன் நிறுவனத்தில் கணக்காளராக வேலை செய்து வருகிறார். தம்பதிக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர். வழக்கம் போல் தம்பதி நேற்று முன்தினம் வேலைக்கு கிளம்பி சென்றனர். மாலை வீட்டுக்கு வந்த பால்காரர், வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து கனகராஜூக்கு தகவல் அளித்தார். பல்லடம் போலீசார் வீட்டுக்கு சென்று பார்த்தனர். பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில், 4.5 சவரன் நகை திருடப்பட்டது தெரிந்தது. திருட்டு தொடர்பாக அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' பதிவுகளை போலீசார் பார்வையிட்டனர். குறிப்பிட்ட நேரத்தில் சந்தேகப்படும் வகையில் கார் ஒன்று வந்து சென்றது தெரிந்தது. சம்பந்தப்பட்ட கார் குறித்து பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !