கஞ்சா சாக்லேட் பறிமுதல் ஜார்கண்ட் வாலிபர் கைது
திருப்பூர்: திருப்பூர் வடக்கு போலீசார் ரயில்வே ஸ்டேஷன் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து வந்த, சந்தேகப்படும் வகையிலான வட மாநிலத்தினரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஆதித்ய குமார், 32 என்ற வாலிபரிடம், 2.5 கிலோ கஞ்சா சாக்லேட் இருப்பது தெரிந்தது. ஊரில் இருந்து வாங்கி, ரயிலில் கடத்தி வருவது தெரிந்தது. அவரை கைது செய்து, பறிமுதல் செய்தனர்.