உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மலைமகளின் மடியில் கலைமகள் கோவில்!  கல்வி விளக்கேற்றும் சச்சிதானந்த ஜோதி நிகேதன்

மலைமகளின் மடியில் கலைமகள் கோவில்!  கல்வி விளக்கேற்றும் சச்சிதானந்த ஜோதி நிகேதன்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், கல்லாறு பகுதியில், யோகா குரு சச்சிதானந்த சுவாமிகளால், 1997 ல் தோற்றுவிக்கப்பட்டது, சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளி. அமைந்திருக்கிறது.பள்ளி நிர்வாகத்தினர் கூறியதாவது:ஆங்கில வழிக்கல்வி, இருபாலர் தங்கி படிக்கும் உண்டு, உறைவிட பள்ளியாக சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் பயிற்றுவிக்கப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில், இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் பள்ளி செயல்படுகிறது.உடல் வலிமை, அறிவு கூர்மை, உறுதியான எண்ணம், ஆன்மிக நாட்டம் கொண்ட இளைஞர்களை உருவாக்குவதுடன் மக்களை சரியான திசையில் நடத்தி செல்லவிருக்கிற குடிமக்களாக மாற்றுகிற, தொலைநோக்கு பார்வையுடன் பள்ளி செயல்படுகிறது.மதச்சார்பற்ற முறையில், முன்னேற்ற சிந்தனையை முதன்மையாக கொண்டு, இப்பள்ளி செயல்படுகிறது. கலாசார பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக, ஜெர்மனி - எர்பர்டில் உள்ள கொனிஜென் லுாயி ஜிம்னாசியம் பள்ளி மாணவ, மாணவியர், 15 நாள் தங்கியிருந்து, நம் நாட்டின் பண்பாடு, பழக்க வழக்கங்களை அறிந்து சென்றுள்ளனர்.உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து கல்வி பயிலும், 7 முதல், 18 வயது வரையுள்ள குழந்தைகள், தங்களின் மற்றொரு வீடாக இப்பள்ளியை கருதுகின்றனர். பல்வேறு விளையாட்டுகள் ஊக்குவிக்கப்படுகின்றன.தினசரி காலை, மாலை யோகா பயிற்சி வழங்கப்படுகிறது. அறிவியல் ஆய்வகம், ஆங்கில இலக்கண ஆய்வகம், இந்திய மற்றும் மேற்கத்திய இசைப்பயிற்சி, ஓவியம், நடனம், நாடகம், தபால் தலை சேகரிப்பு, கராத்தே, புத்தக மதிப்புரை மன்றம், தேசிய மாணவர் படை, துப்பாக்கி சுடுதல், சாரண, சாரணியர் இயக்கம், ரோபோடிக் , மாதிரி ஐ.நா., சபை என, பல்வேறு பயிற்சிகள் வாயிலாக மாணவ, மாணவியரின் திறன் மேம்படுத்தப்படுகிறது.'உண்மை ஒன்று; வழிகள் பல' என்பது பள்ளி நிறுவனர் தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் வழங்கிய கோட்பாடு. 'கல்வியின் மூலம் ஞான ஒளியேற்றுகிறோம்' என்ற மொழிக்கு பொருத்தான வகையில் எம் பள்ளி அமைந்திருக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ