உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ராணுவ பயிற்சி கலாம் விருப்பம்

ராணுவ பயிற்சி கலாம் விருப்பம்

அ னைத்து வளங்களும் நிறைந்த இந்தியா 2020ல் உலகின் வளர்ந்த 5 நாடுகளில் ஒன்றாக திகழும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி, இந்தியர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியதும் அவரே. 1998 மே 11ம் தேதி பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தி, உலக அரங்கில் வலிமையை நிரூபித்தது. இதற்கு அடித்தளம் அமைத்தவர் கலாம்தான். திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் அகிய ஏவுகணைகள் கலாம் திட்ட இயக்குனராக இருந்த போது வடிவமைக்கப்பட்டவை. இந்தியாவுக்காக இவர் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்கிய போது, அமெரிக்கா உள்பட பல நாடுகள் இவரை ஆச்சர்யத்துடனும், மிரட்சியுடனும் பார்த்தன. இந்திய பாதுகாப்புத்துறையின் ஆய்வுக்கு முதலில் வெளிநாட்டு கருவிகள், பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றை நிறுத்தி விட்டு முழுக்க, முழு க்க உள்நாட்டு பொருட்கள் மூலம் ஆய்வுப்பணிகளை கலாம் செய்ய வைத்தார். இளைஞர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று கலாம் விரும்பினார். ஒரு தடவை மைசூரில் நடந்த விழாவில் அவர் பேசுகையில், ''இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞனுக்கும் கட்டாயம் 2 ஆண்டுகள் ராணுவ பயிற்சி அளிக்க வேண்டும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை