உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கமகம வெண்ணெய்க்கு புவிசார் குறியீடு வேண்டும்: ஊத்துக்குளியில் உற்பத்தியாளர் எதிர்பார்ப்பு

கமகம வெண்ணெய்க்கு புவிசார் குறியீடு வேண்டும்: ஊத்துக்குளியில் உற்பத்தியாளர் எதிர்பார்ப்பு

திருப்பூர் : வெண்ணெய் என்றாலே ஊத்துக்குளி தான் தமிழர்களுக்கு ஞாபகம் வரும். பல்வேறு இடங்களில் வெண்ணெய் தயாரித்தாலும், 'கமகம' ஊத்துக்குளி வெண்ணெய் தனி சிறப்பை பெற்றுள்ளது; தனித்துவமான பண்புகளை கொண்டிருக்கிறது.புளிப்பு சுவை மற்றும் பளபளப்பான தன்மையால், மற்ற வெண்ணெய்களில் இருந்து, ஊத்துக்குளி வெண்ணெய் மாறுபட்டு நிற்கிறது. சுவை, மணம், அதிகளவு கெட்டித்தன்மை மிகுந்த ஊத்துக்குளி வெண்ணெய், எருமைப்பாலில் தயாரிக்கப்படுவதால், அதிக வெண்மை நிறம் கிடைக்கிறது.ஊத்துக்குளியில், கால்நடை வளர்ப்பு என்பது முக்கிய தொழிலாக இருக்கிறது. குறிப்பாக, எருமை மாடுகள் வளர்ப்பு அதிகம். எருமைப்பாலுக்கு விலை அதிகம் என்பதை காட்டிலும், பாலில் இருந்து எடுக்கப்படும் வெண்ணெய்க்கும் மதிப்பு அதிகம். இதற்கு காரணமே, கால்நடைகளுக்கு அளிக்கப்படும் தரமான பராமரிப்புதான்.பருத்திக்கொட்டை மற்றும் கொழுக்கட்டை புல் தீவனமாக அளிப்பதால், அதிக கொழுப்புத்தன்மை இல்லாமல், அத்தியவாசிய ஊட்டச்சத்து நிறைந்துள்ளதாக, அதிகாரிகளே சமீபத்தில் தெரிவித்துள்ளனர். சிறிய மற்றும் பெரிய நிறுவனங்கள் என, 50க்கும் அதிகமான பால் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன.பால், தயிர், மோர், வெண்ணெய், நெய், பன்னீர், பால்கோவா என, பால் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு, தினமும் 3,000 லிட்டர் வெண்ணெய் தயாரிக்கப்பட்டது; தற்போது, குறைந்துவிட்டது.ஊத்துக்குளி வெண்ணெய்க்கு, புவிசார் குறியீடு பெற்று, உற்பத்தியாளர்கள் மேற்கொண்டு, தனி அங்கீகாரம் தேடிக்கொடுக்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். முயற்சி வெற்றியாகும் பட்சத்தில், திருப்பூர் மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் ஊத்துக்குளி வெண்ணெய் உற்பத்தியும், உன்னத நிலையை அடையும்!

கிருஷ்ணாவதாரம்

--------------இது மகாவிஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரம். வசுதேவருக்கும், தேவகிக்கும் குழந்தையாக பெருமாள் எடுத்த அவதாரத்தில், வெண்ணெய் திருடி உண்டு குறும்பு பல செய்து, காண்பவர் மனதை கவரும் அழகுடன், கம்சனை கொன்றும், பஞ்ச பாணட்வர்களை காத்து தர்மத்தை நிலைநாட்டிய அவதாரம் இது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ