உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காமராஜர் பிறந்த நாள்

காமராஜர் பிறந்த நாள்

பல்லடம்; பல்லடம் நகர வட்டார த.மா.கா., சார்பில், காமராஜரின், 123வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.பஸ் ஸ்டாண்ட் முன் நடந்த நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் முத்துக்குமார் தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர் சுப்பிரமணியம், மாவட்ட பொதுச் செயலாளர் சின்னசாமி, சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் அன்சாரி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, காமராஜரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிர்வாகிகள் மணியரசு, பொன்னையன், நடராஜ், உதேஷ், கணேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை