மாநில முதலிடம் பெற்ற மாணவர்கண்ணம்மாள் பள்ளி பெருமிதம்
திருப்பூர்,: திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டத்தில், கடந்த, 25 ஆண்டுகளாக கண்ணம்மாள் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.நடந்து முடிந்த பிளஸ் 2 பொது தேர்வில், மாணவன் ராகுல், 600க்கு 599 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் பிரெஞ்ச், கணக்கியல், வணிகவியல், பொருளியல், கம்ப்யூட்டர் பயன்பாடு பாடங்களில், 100க்கு 100 மதிப்பெண் மற்றும் ஆங்கில பாடத்தில், 99 மதிப்பெண் பெற்றுள்ளார்.பள்ளிக்கும், மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்த மாணவருக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார் பாராட்டு தெரிவித்தார்.முன்னதாக, கண்ணம்மாள் பள்ளி தலைவர் சங்கர கிருஷ்ணன், செயலாளர் வத்சலாகிருஷ்ணன், தாளாளர் அப்ராஜிதா, பள்ளி முதல்வர் ேஹமலதா, ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் சக மாணவர்கள் பதக்கம் மற்றும் பரிசு வழங்கி, பாராட்டினர்.