உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காணாமல் போகிறது காணும் பொங்கல்

காணாமல் போகிறது காணும் பொங்கல்

திருப்பூர்: பொங்கல் விடுமுறையை அனுபவித்தாக வேண்டும் என்ற எண்ணம் பலருள் இருந்தாலும், அதன் தாத்பரியம் குறித்து அறிந்திருப்பதில்லை.நீண்ட நாள் கிடைக்கும் தொடர் விடுமு-றையை, சினிமா, சமூக வலைதளம், 'டிவி' நிகழ்ச்சிகள் என்று கழித்து விடுகின்றனர்.பொங்கல், மாட்டுப்பொங்கலை தொடர்ந்து ஊர் கூடி ஒற்றுமையாக கொண்டாடப்படும் காணும் பொங்கல் விழா இன்று காணாமல் போகும் நிலை காணப்படுகி-றது.திருப்பூர் மாவட்டத்தில், குடும்பத்தார், உறவினர், நண்-பர்கள் என பொது இடத்தில் ஒன்று கூடி மகிழ்ந்து தங்கள் உறவு-களின் இணைப்பை பலப்படுத்திக் கொள்வதாக, இது அமைந்-தது. மூத்தோரைச் சந்திப்பது; திருமணப்பேச்சு போன்ற குடும்ப நிகழ்ச்சிகளை முன்னெடுப்பது போன்றவற்றுக்கு இந்த காணும் பொங்கல் இணைப்பு பாலமாகவும் அமைந்தது. நீர் நிலைகள், கோவில்கள், பூங்காக்கள், திடல்கள் போன்ற பொது இடங்களில் ஒன்று கூடி மகிழ்ந்து உறவாடி, விளையாடி மகிழ்வது இதன் நோக்கம். இவற்றையெல்லாம் பெரும்பாலானோர் மறந்துவிட, ''காணும் பொங்கலா... அப்படீன்னா'' என்று கேட்கிறது இன்-றைய இளைய தலைமுறை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி