உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கார்கில் விஜய் திவாஸ் விழா; பள்ளியில் சிறப்பு நிகழ்ச்சி

கார்கில் விஜய் திவாஸ் விழா; பள்ளியில் சிறப்பு நிகழ்ச்சி

உடுமலை; உடுமலையில் கார்கில் விஜய் திவாஸ் விழா சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. உடுமலை ஆர்.ஜி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், கார்கில் விஜய் திவாஸ் விழாவையொட்டி சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் இந்திய வீரர்களின் வீரத்தை நினைவு கூர்ந்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர். தேசத்திற்காக உயிரிழந்த வீரர்களின் தியாகத்தை நினைவுபடுத்தி, மாணவர்கள் மவுன நாடகம் நடத்தினர். பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்குவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை