கார்த்திகை தீப விழா ஏற்பாடுகள்
திருப்பூர்,: சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருநாளை ஒட்டி மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கமாக உள்ளது. இதற்காக, சிவன்மலை ராஜ கோபுரத்தின் முன் மஹா தீபம் ஏற்ற வசதியாக கம்பம் வைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பத்தின் மேல் செல்வதற்காக ஏணி உள்ளது.அந்த ஏணி சிறியதாக உள்ளதால், தீபம் ஏற்ற செல்லவும், அதற்கு உண்டான பொருட்களை கொண்டு செல்ல சிரமம் ஏற்பட்டு வந்தது. வரும் கார்த்திகை தீப திருநாளில் தீபம் ஏற்ற வசதியாக இரும்பு தடுப்புகளால் ஆன ஏணி தயார் செய்யப்பட்டு, தீபஸ்தம்பம் இருக்கும் பகுதியில் வைக்கப்பட்டு, அதற்கான பணி தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது.