உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கதிரவன் பள்ளியின் வெற்றி பயணம்

கதிரவன் பள்ளியின் வெற்றி பயணம்

திருப்பூர்: திருப்பூர், மங்கலம் ரோடு, கே.வி.ஆர்., நகரிலுள்ள கதிவரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 65 ஆண்டுகளுக்கும் மேலாக, 100 சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது.கடந்த, 2024 - 25 கல்வியாண்டிலும், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. நடப்பு கல்வியாண்டில், மாணவர் கவின், 594 மதிப்பெண் பெற்று, பள்ளி அளவில் முதலிடம் பெற்றார். ஆரோக்கியராஜ், 591 மதிப்பெண் பெற்று, இரண்டாமிடம், ரேவந்திஹா, 589 மதிப்பெண் பெற்று, மூன்றாமிடம் பெற்றார்.கணிதம் மற்றும் கணக்குப்பதிவியல் பாடத்தில், தலா ஒருவர், வணிகவியலில் 3 பேர், கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தில், 4 பேர், கம்ப்யூட்டர் அப்ளி கேஷன் பாடத்தில், 9 மாணவர்கள் என, 18 பேர் நுாறுக்கு நுாறு மதிப்பெண் பெற்றனர்.இதுதவிர, 27 மாணவர்கள் பல்வேறு பாடங்களில், 99 மதிப்பெண் பெற்றுள்ளனர். தேர்வெழுதிய அனைவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய, 76 பேரில், 500 மதிப்பெண்ணுக்கு மேல், 44 பேர், 550க்கு மேல், 20 பேர்; 570 க்கு மேல், 6 பேர்; 590 மதிப்பெண்ணுக்கு மேல், 2 பேர் பெற்றுள்ளனர். பொறியியல் கட் ஆப், 197.முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் கவினை, பள்ளி தாளாளர் நாராயணமூர்த்தி, செயலாளர் இந்திராணி, பொருளாளர் நிவேதா பார்த்திபன் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர். மாணவர்களின் சாதனைக்கு காரணமான ஆசிரியர்களையும், முதல்வர் பாராட்டினார்.பள்ளி நிர்வாகத்தினர் கூறியதாவது: எல்.கே.ஜி., முதல், 11ம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. 10ம் வகுப்பு தேர்வில், 425 மதிப்பெண்களுக்கு மேல் பெறும் மாணவர்களுக்கு, 11ம் வகுப்பு சேர்க்கையில் கல்விக் கட்டண சலுகையும் வழங்கப்படுகிறது. விவரங்களுக்கு, 92620 46040, 90251 26656 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ