உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குறைகளை அடுக்கிய காட்டூர் பொதுமக்கள்

குறைகளை அடுக்கிய காட்டூர் பொதுமக்கள்

பொ ங்கலுார் அடுத்த காட்டூரில் நேற்று கிராம சபா கூட்டம் நடந்தது. இதில், பொதுமக்கள் தங்கள் குறைகளை கொட்டி தீர்த்தனர். மூன்று கி.மீ.,ல் உள்ள அவிநாசிபாளையம் காவல் நிலைய எல்லையில் இருந்து, காட்டூரை காமநாயக்கன்பாளையத்திற்கு மாற்றியதால் மூன்று பஸ் மாறி, 30 கி.மீ., செல்ல வேண்டியுள்ளது. பொங்கலுாரில் போலீஸ் ஸ்டேஷன், பத்திரப்பதிவு அலுவலகம் கொண்டு வர வேண்டும். பொங்கலுார், காட்டூர், மாதப்பூர் ஊராட்சிக்கு டோல்கேட்டில் ப்ரீ பாஸ் தர வேண்டும். நிறுத்தப்பட்ட பல்லடம் கொடுவாய் பஸ்சை இயக்க வேண்டும். காட்டூர் அரசு உயர் பள்ளி பராமரிப்பு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர். காட்டூர் சர்ச் வீதி, பாரதியார் புரம் ஆகிய இடங்களில் மின்விளக்கு அமைத்தல் உள்ளிட்ட, 21 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. இவற்றில், 18 அரசு கொடுத்தவை. இதில் பங்கேற்ற கலெக்டர் மனிஷ் நாரணவரே பேசுகையில், 'மழைக்காலம் துவங்கியதால் கொசு உற்பத்தி ஆகி நோய் வர வாய்ப்புள்ளது. தண்ணீர் தொட்டியை மாதம் இருமுறை சுத்தம் செய்ய வேண்டும். குப்பைகளை தரம் பிரித்து தரவேண்டும். துணிப்பைகளை உபயோகப்படுத்த வேண்டும். கிராம சபா கூட்டத்திற்கு அதிகம் பேர் வர வேண்டும். நுாலகத்தைப் பயன்படுத்த வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை