உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நிரந்தர கட்டடத்தில் கேந்திரிய வித்யாலயா

நிரந்தர கட்டடத்தில் கேந்திரிய வித்யாலயா

உடுமலை: உடுமலை கேந்திரிய வித்யாலயா பள்ளி நேற்று முன்தினம் முதல் நிரந்தர கட்டடத்தில் செயல்பட துவங்கியுள்ளது. உடுமலையில், கடந்த 2019ல், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி துவக்கப்பட்டு, ராஜேந்திரா ரோட்டிலுள்ள அரசுப்பள்ளி கட்டடத்தில் வகுப்பறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது இப்பள்ளியில், 213 மாணவர்கள், 167 மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கான நிரந்தர கட்டடம், பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில், முக்கோணம் அருகே கட்டப்பட்டு வந்தது. கட்டுமான பணிகள் நிறைவு பெற்று, நேற்று முன்தினம் முதல் பள்ளி நிரந்தர கட்டடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. வகுப்பறை கட்டுமான பணிகள் தாமதம் காரணமாக, இந்தாண்டு பிளஸ் 1 சேர்க்கை மேற்கொள்ளப்படவில்லை. புதிய கட்டடம் பயன்பாட்டுக்கு வந்துள்ளதால், வரும் கல்வியாண்டில், பிளஸ் 1 சேர்க்கை துவக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ