உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மழலையர்களுக்கு பட்டமளிப்பு

மழலையர்களுக்கு பட்டமளிப்பு

திருப்பூர் : திருப்பூர், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும், மழலையர் பள்ளி ஆண்டு விழா, பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா அமலோற்பமேரி வரவேற்றார். மாநகராட்சி கல்விக்குழு தலைவர் திவாகரன் முன்னிலை வகித்தார். துணை மேயர் பாலசுப்ரமணியம், யு.கே.ஜி., முடித்து, ஒன்றாம் வகுப்பு செல்லும் குழந்தைகளுக்கு தேர்ச்சி சான்றிதழ், பட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார் சிறப்புரை ஆற்றினார். விழா நிறைவாக, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு குழந்தைகளின் கலைநிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !