காங்., சொத்து மீட்புக்குழு பயணம் திடீர் ரத்து
திருப்பூர்; தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக்குழுவின் தலைவர் தங்கபாலு தலைமையிலான குழுவினர், ஐந்தாம் கட்ட சுற்றுப்பயணமாக, திருப்பூர் மாவட்டத்தில் நேற்று பல்லடம், திருப்பூர் மாநகரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தனர். நேற்று முன்தினம் பொள்ளாச்சியில் பயணத்தை முடித்து விட்டு, நேற்று திருப்பூர் வர இருந்தனர். திடீரென திருப்பூர் மாவட்டத்தில் மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணத்தை ரத்து செய்து, சென்னை கிளம்பி சென்றனர். தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர். அகில இந்திய காங்., கமிட்டி செயலாளர் கோபிநாத் பழனியப்பனிடம் கேட்டதற்கு, ''பொள்ளாச்சி பயணத்தை முடித்து விட்டு திருப்பூர் வர இருந்த நிலையில், தலைமையில் இருந்து அவசர அழைப்பு காரணமாக பயணத்தை ரத்து செய்துவிட்டு கிளம்பிச்சென்றனர். இதுதவிர, மீட்பு குழுவில் இடம் பெற்றுள்ள அகில இந்திய காங்., கமிட்டி இணை செயலாளர் நித்தின் கும்பல்கரின் குடும்பத்தில், ஒருவருக்கு உடல் நலம் சரியில்லாமல் போனதும் இன்னொரு காரணம். இருப்பினும், 15 நாட்களுக்கு பின், திட்டமிட்டபடி, திருப்பூர் மாவட்டத்துக்கு சொத்து மீட்புக்குழுவினர் வருவர்,'' என்றார்.