உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கொங்கணகிரி கந்தப்பெருமான் தேரோட்டம்

கொங்கணகிரி கந்தப்பெருமான் தேரோட்டம்

அனுப்பர்பாளையம்; திருப்பூர் காலேஜ் ரோட்டில் கொங்கணகிரி கந்தப் பெருமான் கோவிலில், வைகாசி விசாக தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது.விழாவையொட்டி, மாலை 3:30 மணிக்கு கந்த பெருமானுக்கு மஹா அபிஷேகம், தொடர்ந்து, 4:00 மணிக்கு மஹா தீபாராதனை நடைபெற்றது. 4:15 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து, இழுத்தனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் பவானி, தக்கார் சபரீஷ்குமார் மற்றும் மக்கள் நல அறக்கட்டளை நிர்வாகிகள் கந்தசாமி, ராஜாமணி, கணேசன், துரைசாமி, தேவசாமி, ஆகியோர் செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை