ஸ்ரீரங்கநாதர் கோவிலில் இன்று கும்பாபிேஷகம்
உடுமலை: குறிஞ்சேரியில் ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோவில் கும்பாபிேஷகம் இன்று, நடக்கிறது. உடுமலை அருகே குறிஞ்சேரியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் கோவில் அமைந்துள்ளது. கோவில் வளாகத்தில், ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோவில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டது. பணிகள் நிறைவு பெற்று நேற்று முன்தினம் மகா சுதர்சன ேஹாமத்துடன் கும்பாபிேஷக விழா துவங்கியது. நேற்று காலை, முதல் கால பூஜையும், திருவாராதனமும், மாலையில், பிம்ப சுத்தி திருமஞ்சனமும், விமான திருமஞ்சனமும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக, இன்று (20ம் தேதி) காலை, 6:30 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது. காலை, 8:30 மணிக்கு மேல் கடம் புறப்பாடு, காலை, 9:00 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் ஸ்ரீ ரங்கநாதர் கோதாநாயகா விமான கும்பாபிேஷகம், மூலமூர்த்தி கும்பாபிேஷகம் நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியில், குறிஞ்சேரி மற்றும் சுற்றுப்பகுதி பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.